ஊமச்சிகுளம் கண்மாயை பராமரிக்க வழக்கு: மதுரை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவு


மதுரை: மதுரை ஊமச்சிக்குளம் கண்மாயை பாராமரிக்கக் கோரிய வழக்கில் மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை ஊமச்சி குளத்தை சேர்ந்த சுருளிராஜன் கருப்பணன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: "மதுரை நத்தம் சாலையில் ஊமச்சி குளத்தில் அரசு கண்மாய் பல லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு கண்மாயின் நான்கு புறக்கரைகளில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டது. சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டது.

அந்த பூங்கா தற்போது பராமரிக்கப் படாமல் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இப்பகுதியில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. எனவே ஊமச்சிக்குளம் கண்மாய் மற்றும் பூங்காவை முறையாக பராமரிக்க உத்தரவிட வேண்டும். என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மதுரை மாநகராட்சி ஆணையர், ஊமச்சிகுளம் காவல்துறை ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்-29ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

x