திருவண்ணாமலை மாவட்டத்தில் மழைககு அதிகம் பாதிக்கக் கூடிய பகுதிகளாக 56 இடங்கள்!


திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக்கு 56 இடங்கள் அதிகளவில் பாதிக்கக்கூடிய பகுதிகளாக கண்டறி யப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக பருவமழையால் அதிகம் பாதிக்கக்கூடியதாக 56 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆரணி வட்டத்தில் கொங்கரம் பட்டு, மேல்நகர், 5–புத்தூர், கொளத்தூர், இரும்பேடு, சேத்துப்பட்டு வட்டத்தில் நெடுங்குணம், கங்கைசூடாமணி, சேத்துப்பட்டு, செய்யாறு வட்டத்தில் விண்ண வாடி, புளியரம்பாக்கம், அனக் காவூர், செங்காட்டான் குண்டில், நெடுங்கல், ஆலத்துறை, பையூர், குண்ணவாக்கம், கலசப்பாக்கம் வட்டத்தில் கனத்தம்பாளையம், சீனந்தல், கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் கூடலூர், போளூர் வட்டத்தில் மண்டகொளத்தூர், தண்டராம்பட்டு வட்டத்தில் ராயண்டபுரம், திருவடத்தனூர், எடத்தனூர், புத்தூர் செக்கடி, அகரம் பள்ளிப்பட்டு, தொண்ட மானூர், திருவண்ணாமலை வட்டத்தில் நொச்சிமலை, மலப் பாம்பாடி, வட ஆண்டாப்பட்டு, குண்ணுமுறிஞ்சி, கிளியாப்பட்டு, சின்னகல்லபாடி, வந்தவாசி வட்டத்தில் வெண்குன்றம், கீழ் சாத்தமங்கலம், பாதிரி, பிருதூர், சென்னாவரம், மருதாடு, வழுர், கடைசிகுளம், அதியனூர், கீழ் விள்ளிவளம், ராமசமுத்திரம், தெள்ளார், மேல்செம்பேடு, செப்டாங்குளம், வெம்பாக்கம் வட்டத்தில் மாத்தூர், மங்கல், தூசி, சோழவரம், சின்னத்தூர், கனகம்பாக்கம், அரிகரபாக்கம், நமண்டி, செட்டிதாங்கல், ஒழுக வாக்கம் ஆகிய 56 பகுதிகள் அதிகளவில் பாதிக்கக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

x