அப்துல் கலாம் பிறந்த நாள்: கடலூரில் பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு மாலை அணிவித்து மரியாதை 


கடலூர்: முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 93-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு கடலூர் பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர், ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பொதுநலப் பேரவையினர் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கடலூர் பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பொதுநலப் பேரவை ஆகியவை இணைந்து இன்று காலை கடலூர் முதுநகர் சிங்காரத்தோப்பில் உள்ள கலாமின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரது புகழை போற்றி கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்துக்கு கடலூர் பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்ட தலைவர் சுப்புராயன் வரவேற்றுப் பேசினார். கடலூர் வாசிப்போர் இயக்கம் மற்றும் கடலூர் நுகர்வோர் கூட்டமைப்பின் தலைவர் தோழர் பால்கி, ஓவியர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இளைஞர் காங்கிரஸ் கோபிநாத், திக தர்மன், மக்கள் அதிகாரம் ரவிச்சந்திரன், பாண்டியன், தமிழ்நாடு மீனவர் பேரவையின் மாலைமணி, வீரமுத்து மற்றும் கடலூர் பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பொதுநலப் பேரவை நிர்வாகிகள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர். கடலூர் வட்ட தனியார் பேருந்து தொழிலாளர் சங்கத்தின் தலைவர் குருராமலிங்கம் நன்றி கூறினர்.

x