மத கலவரத்தை தூண்டுவதா? - ஆர்எஸ்எஸ் தலைவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்


சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் பேசிய, அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத், மத பகைமையையும், கலவரத்தையும் தூண்டும் நோக்குடன் பேசியுள்ளார். நாட்டைப் பாதுகாக்க மத அடிப்படையில் ஒன்று திரள வேண்டுமென்ற அவரது கோரிக்கை, மறைந்த ஆர்எஸ்எஸ் தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர் எழுதிய நூல்களின் உள்ளடக்கங்களையே மீண்டும் வெளிப்படுத்துகிறது.

இந்தியா என்பது இந்துக்களுக்கான நாடு, இங்கு முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் வாழ வேண்டுமானால் பாரதப் பண்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எம்.எஸ்.கோல்வால்கர் எழுதியவற்றை, மீண்டும் வாசித்ததைபோலவே மோகன் பகவத் பேசியுள்ளார். மேலும், நாட்டில் இந்துக்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனவும் அவர் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. அவரது உரை, மதரீதியிலான மோதல்களை அதிகரிக்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x