மதுரை: காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் டிஜிட்டல் வடிவில் காந்திய இலக்கியம்


மதுரை: காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் டிஜிட்டல் வடிவத்தில் காந்திய இலக்கியங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியடிகளின் எழுத்துகள், பேச்சுகள் கடிதங்கள், அறிக்கைகள், கடிதங்கள் உரையாடல்கள் மற்றும் காந்தியடிகள் குறித்த 11 ஆயிரத்து 720 புத்தகங்கள் அனைத்தும் முழுமையாக டிஜிட்டல் தொகுப்பினை கர்நாடகா காந்தி நினைவு நிதி தயாரித்துள்ளது.

இந்த டிஜிட்டல் தொகுப்பினை கர்நாடக மாநில சட்ட அமைச்சர் எச். கே. பாட்டீல் வெளியிட்டார். இந்த டிஜிட்டல் தொகுப்பினை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் உள்ள காந்திய கல்வி ஆராய்ச்சி மையத்திற்கு வழங்கும் நிகழ்வு காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.

காந்தி நினைவு அருங்காட்சியக செயலாளர் கே. ஆர் நந்தாராவ் பொருளாளர் வழக்கறிஞர் மா.செந்தில் குமார் ஆகியோர் வழங்க காந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய முதல்வர் டாக்டர் தேவதாஸ், உதவிப் பேராசிரியர் ஆர்.நடராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்த டிஜிட்டல் தொகுப்பு காந்திய சிந்தனை சான்றிதழ் மற்றும் பட்டய மாணவ மாணவியர் பேராசிரியர்கள் பொதுமக்கள் ஆகியோருக்கு பயன்படும் என்று காந்தி நினைவு அருங்காட்சியக செயலாளர் கே.ஆர்.நந்தாராவ் தெரிவித்தார்.

x