புரட்டாசி கடைசி சனிக்கிழமை: கும்பகோணத்தில் 5 வைணவ கோயில்களுக்கு ஆன்மிக பயணம்!


கும்பகோணம்: புரட்டாசி சனிக்கிழமைகளில் கும்பகோணம் பகுதியில் உள்ள 5 வைணவ கோயில்களுக்கு பக்தர்கள் ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்படுவர் என இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, புரட்டாசி 4-வதும், கடைசி சனிக்கிழமையொட்டி இன்று கும்பகோணம் சாரங்கபாணி, சக்கரபாணி கோயில்கள், திருச்சேறை சாரநாத பெருமாள் கோயில், ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாசலபதி கோயில், நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோயில் ஆகிய 5 வைணவ கோயில்களுக்கு, 3 வாகனங்களில் 35 பக்தர்கள் இன்று ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் இந்தப் பயணத்தை அறநிலையத் துறை செயல் அலுவலர்கள் எஸ்.சிவசங்கரி,சுந்தர்ராஜன்,ரஞ்சிதா மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆ.சங்கர் ஆகியோர் தொடங்கிவைத்து, பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில் மற்றும் பிரசாதங்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து, அடுத்தாண்டு புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பக்தர்கள் ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்பட உள்ளனர் என அறநிலையத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

x