நாளை சூரசம்ஹாரம்: குலசேகரப்பட்டினத்தில் பாதுகாப்பு பணியில் 4,000 போலீஸார்!


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம் விழா நடைபெற உள்ள நிலையில் 4,000 போலீஸார் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கடந்த அக்டோபர் 3ஆம் தேதி குலசேகரன்பட்டினத்தில் கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடங்கிய நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை அக்டோபர் 12ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.

திருவிழாவின் முதல் நாளான கொடியேற்ற விழாவில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில், நாளை நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வுக்கு மேலும் அதிகமான பக்தர்கள் காரம் நிகழ்விற்கு சுமார் 4000 காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அதற்கான முன்னேற்பாடுகளாக கோவில் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 50 -க்கும் மேற்பட்ட பகுதிகளில் மொத்தம் 250க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொருத்தி பக்தர்களின் பாதுகாப்பை மேம்படுத்தியும், பக்தர்களின் தேவைகள் மற்றும் சந்தேகங்களை பூர்த்தி செய்வதற்காக ஆங்காங்கே 10 காவல் உதவி மையங்கள் அமைத்தும், பக்தர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, அவசர மருத்துவ உதவி மையம், கழிப்பிட வசதிக்காக ஆங்காங்கே நடமாடும் கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டும், தீயணைப்பு துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் 24 மணி நேரமும் பொதுமக்களின் சேவைக்காக வைக்கப்பட்டுள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

x