இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், “பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கொண்டாடப்படும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று.
பெண்களின் சம உரிமை மற்றும் முன்னேற்றத்தை நோக்கமாக கொண்டு கொண்டாடப்படும் இந்நாளில், பாலின பாகுபாடின்றி பெண் குழந்தைகளுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரத்தை வழங்குவதோடு, பெருகிவரும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவங்களை வேரோடு களைந்திடவும் நாம் அனைவரும் உறுதியேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.