தூய்மை நகரங்கள் பட்டியலில் திமுக ஆட்சியில் சென்னைக்கு 199-வது இடம்: பழனிசாமி குற்றச்சாட்டு


சென்னை: திமுக ஆட்சியில் தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை 199-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் உள்ள நகரங்களின் தூய்மைப் பட்டியலில், எங்கள் ஆட்சியில் 2020-ல் 45-வது இடத்திலும்; 2021–ல் 43-வது இடத்திலும் சென்னை மாநகராட்சி இருந்தது.

ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவோம் என்று தம்பட்டம் அடிக்கும் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடன், 2 முறை சொத்துவரி உயர்வு, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் கட்டண உயர்வு, குப்பை வரி உயர்வு என்று பல்வேறு சுமைகளை மக்கள் தலையில் சுமத்தியுள்ளார்.

மக்களிடம் வசூலிக்கும் கட்டணங்களுக்கு ஏற்ப தூய்மைப் பணிகளை மேற்கொள்ளாததால் இன்று சென்னை மாநகராட்சி அகில இந்திய அளவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்த ஆண்டு 199-வது இடத்தைப் பிடித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ஏற்கெனவே மேயராக இருந்த ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட அமைச்சர்கள்,மாநகராட்சி மேயர், தேர்ந்தெடுக் கப்பட்ட கவுன்சிலர்கள் என்று அனைவரும் இருக்கும் நிலையில், தொடர்ந்து சென்னை மாநகராட்சி அவல நிலையில் உள்ளதைக் கண்டு, மாநகராட்சி தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தது குற்றமாஎன்று மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

பருவ மழைக் காலங்களில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் வெள்ள நீர் தேங்கியிருந்த நிலையில், 2020-ம் ஆண்டில் அந்த இடங் கள் பெருமளவு குறைக்கப்பட்டது. அப்போது, சென்னையில் 210 நீர்நிலைகளில், 140 நீர்நிலைகளில் தூர்வாருதல் மற்றும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

48 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வரத்துக்கால்வாய்கள் தூய்மைப்படுத்தப் பட்டன. ரொபோடிக் எக்ஸ்கவேட் டர், மினி ஆம்பிபியன் வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டு சென்னை மாநகராட்சி முழுவதும் தூர்வாரும் பணிகள், தூய்மைப் பணிகள் நடைபெற்றன.

எங்களது ஆட்சியில் இப்பணிகள் முழுமையாக நடைபெற்றது போல், திமுக ஆட்சியில் இப்பணிகள் முழுமையாக நடைபெறாத காரணத்தால், தூய்மை நகரமாக 43-ஆவது இடத்தில் இருந்த சென்னை மாநகராட்சி, தற்போது 199-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இனியாவது, அதிமுக ஆட்சியில் நடைபெற்றதுபோல், சென்னை மாநகரில் தூய்மைப் பணிகள், சாலை பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு ஸ்டாலினின் அரசுமீண்டும் தூய்மை நகரங்கள் பட்டி யலில் சென்னை மாநகராட்சியை முன்னிலைக்குக் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

x