தென்காசி: பச்சேரி கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் வெண்ணி காலாடி சிலை திறப்பு!


தென்காசி: தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பச்சேரி கிராமத்தில் மாமன்னர் பூலித்தேவனின் படைத்தளபதியாக திகழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் வெண்ணி காலாடிக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் தமிழக அரசு சார்பில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று திறந்துவைத்தார்.

இதையடுத்து, வெண்ணி காலாடி சிலைக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.ஸ்ரீனிவாசன், தென்காசி தொகுதி எம்பி-யான டாக்டர் ராணி ஸ்ரீகுமார், வாசுதேவநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார், சங்கரன்கோவில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம் மற்றும் பராமரிப்பு) அனிட்டா சாந்தி, உதவி செயற்பொறியாளர் ஜான் ஆஷிர், சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம், உதவி பொறியாளர்கள் சுரேந்திர பாக்கியநாதன், அசோக், மாலிக் பெரோஸ்கான், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், வாசுதேவநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் பொன்முத்தையா பாண்டியன், துணைத் தலைவர் மோகன், நெற்கட்டும்செவல் ஊராட்சி தலைவர் பாண்டியராஜா மற்றும் வெண்ணி காலாடியின் வாரிசுதாரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

x