விக்கிரவாண்டியில் தவெக மாநாட்டு பணிகள் தொடக்கம்


விக்கிரவாண்டியில் தவெக மாநாட்டு பணிக்காக இரும்பு பைப்புகளை ஏற்றிவந்த லாரி திடலில் இருந்த சேற்றில் சிக்கி நின்றது.

விழுப்புரம்: விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் மாநாட்டிற்கு பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து மாநாடு நடைபெறும் இடத்தை சமன்படுத்தி அப்பகுதியில் உள்ள 6 கிணறுகளுக்கு இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணியும், மேடை அமைக்க அடித்தள பைப்புகள் நடும் பணியும் நடைபெற்றது. மாநாடு பந்தல் அமைக்க இரும்பு பைப்புகள் ஏற்றி வந்த லாரி மாநாட்டுத் திடலில் சேற்றில் சிக்கி நின்றது. பின்னர் கிரேன் கொண்டு அந்த லாரியை அப்புறப்படுத்தினர்.

மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கும்பணி தனியார் கார்ப்பரேட் கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்களுக்கு 250 டாய்லெட் வசதி, வாகனங்கள் நிறுத்த சாலையின் இருபுறங்களிலும் 50 ஏக்கர் அளவில் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநாடு மேடை அமைக்கும் பணி சினிமா கலை இயக்குநர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

x