திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மேலப்பட்ட மங்கலத்தில் நேற்று கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சித் தலைவர் சந்திரன் தலைமை வகித்தார்.
அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித், தேவகோட்டை சார்-ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் ஆகியோர் பார்வையாளராகப் பங்கேற்றனர்.
அப்போது 2 சிறுவர்கள் பேசுகையில், விளையாட்டு மைதானம் வேண்டும். குடிநீர் பற்றாக்குறை உள்ளது. அதைச் சரிசெய்ய வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர்த் தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும், புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்தனர்.
தைரியமாகக் குறைகளைத் தெரிவித்த அந்தச் சிறுவர்களை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பாராட்டினர். மேலும் கிராம மக்களின் தேவைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.