ஜவாஹிருல்லா பேச்சுக்கு கண்டனம்: பயங்கரவாத ஆதரவு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க இந்து முன்னணி வலியுறுத்தல்


சென்னை: இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் நேற்று விடுத்த அறிக்கை யில் கூறியிருப்பதாவது: உலகத்தின் எந்த நாட்டில் பயங்கரவாத செயல்கள் நடந்தாலும் அதில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் சில அமைப்புகள் செயல்படுகின்றன. ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு தமிழகத்தில் ஆள்சேர்க்கும் நிகழ்வுகளை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாததால், சார்பு ஆய்வாளர் வில்சன் கொலை, 20-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஐஎஸ்ஐஎஸ் டிசர்ட்டுடன் புகைப்படம் வெளியானது நடந்தது,

இந்நிலையில், லெபனான் நாட்டில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவரான ஹசன் நஸ்ருல்லா, இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு சென்னை, மீர்சாகிப்பேட்டை பள்ளிவாசல் முன்பு பேனர் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இது கடும்கண்டனத்துக்குரியது. இதனை செய்தவர் களை தமிழக அரசும், உளவுத்துறையும் உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும்.

அதேபோல், ஹசன் நஸ்ருல்லா கொலை தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேசியகருத்துக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்துமதத்தினரும் வாக்களித்து தேர்ந்தெடுக்கப் பட்ட இவர், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசுவதை தமிழக அரசு வேடிக்கைபார்க்கிறதா?

இனி இதுபோன்ற பயங்கரவாத ஆதரவு சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

x