மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்


மத்திய நிதியமைச்சரை கண்டித்து தமிழ்நாடு ஐந்தொழில் விஸ்வகர்மா சமுதாய சங்கங்களின் கூட்டமைப்பினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஜெ.மனோகரன்

கோவை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து தமிழ்நாடு ஐந்தொழில் விஸ்வகர்மா சமுதாய சங்கங்களின் கூட்டமைப்பினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவை நிறுவனர் மற்றும் தலைவர் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தச்சு தொழிலாளர், தங்க நகை தொழிலாளர், பாத்திரத் தொழிலாளர் இரும்பு தொழிலாளர், சிற்ப தொழிலாளர் ஆகிய ஐவர் மட்டுமே விஸ்வகர்மா தொழிலாளர்கள். இந்நிலையில் சமீபத்தில் கோவைக்கு வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிஎம் விஸ்வகர்மா திட்டத்தின்கீழ் 18 தொழில் செய்பவர்கள் விஸ்வகர்மா தொழிலாளர்கள் என்றார்.

விஸ்வர்கமா என்பது ஒரு ஜாதியும் இல்லை, பாரம்பரிய தொழிலும் அல்ல என்று தெரிவித்த கருத்து மிகவும் தவறானது. அதை உடனே திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் போராட்டங்கள் நடத்தப்படும்” என்றார். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் நிதியமைச்சருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

x