நெல்லை மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 505 மி.மீ. மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 98 அடி


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, அணைப்பகுதிகள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தமாக 505.60 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 84 மி.மீ. மழை பெய்திருந்தது.

பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): அம்பாசமுத்திரம்- 40.40 மி.மீ, சேரன்மகாதேவி- 29.60 மி.மீ, மணிமுத்தாறு- 23.80 மி.மீ, நாங்குநேரி- 16 மி.மீ, பாபநாசம்- 40 மி.மீ, ராதாபுரம்- 21 மி.மீ, திருநெல்வேலி- 49 மி.மீ, சேர்வலாாறு அணை- 35 மி.மீ, கன்னடியன் அணைக்கட்டு- 37.40 மி.மீ, களக்காடு- 10.40 மி.மீ, கொடுமுடியாறு- 4 மி.மீ, மூலைக்கரைப்பட்டி- 25 மி.மீ, நம்பியாறு- 10 மி.மீ, மாஞ்சோலை- 15 மி.மீ, காக்காச்சி- 18 மி.மீ, நாலுமுக்கு- 26 மி.மீ, ஊத்து- 21 மி.மீ. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 98 அடியாக இருந்தது.

அணைக்கு வினாடிக்கு 251 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1004 கனஅடி தண்ணீர் திறந்துவிடப் பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 64.90 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 29 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 50 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

x