கூர்க் அருகே உள்ள நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஒரு வழிகாட்டிப் பலகை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் கூர்க் அருகே உள்ள நெடுஞ்சாலையில் அவசரகால அடையாள பலகை ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னடத்தில் இருந்து ஆங்கிலத்திற்கு தவறான மொழிபெயர்ப்பே இதற்குக் காரணம். மங்களூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த பலகை உள்ளது. அதில், அர்ஜென்ட் மேக் அன் ஆக்சிடென்ட் என்று எழுதப்பட்டுள்ளது. இந்த ஆங்கில வாக்கியத்தின் கன்னட அர்த்தம், அவசரமாக ஒரு விபத்தை உண்டாக்குங்கள்' என்பதாகும்.
இதைப் பார்த்த குடகு கனெக்ட் என்ற எக்ஸ் பயனர், இந்த போர்டை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், " அர்ஜென்ட் மேக் அன் ஆக்சிடென்ட் என்று எழுதப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் இந்த அடையாளத்தை அப்படியே பின்பற்றினால், அர்த்தமற்றதாகி விடும்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த போர்டைப் பார்த்து இணையவாசிகள் பலர் கிண்டல் செய்துள்ளனர்.அத்துடன் வழிகாட்டிப் பலகைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க அரசு முயற்சி செய்வது குறித்து சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அவசரத்திற்குப் பிறகு கமாவை வைப்பது அர்த்தத்தை முழுவதுமாக மாற்றுகிறது என்று ஒரு பயனர் எழுதியுள்ளார். மற்றொரு பயனர், “காப்பீட்டு முகவர்களைக் குறியிடவும். சீக்கிரம் சரி செய்வார்கள்” என்று கேலி செய்துள்ளார்.