படிக்கட்டில் ஒருவர் ஆபத்தான முறையில் பைக் சாசகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாவதற்காக பலர் பல்வேறு சாகசங்களை செய்து வருகின்றனர். அதற்காக பல்வேறு ஆபத்துகளையும் அவர்கள் எதிர்கொள்கிறார்கள். உயரமான இடங்களில் இருந்து குதிப்பது, கடலுக்குள் குதிப்பது, ரயிலில் இருந்து வெளியே பாய்வது என பல்வேறு ஆபத்தான சாகசங்களை செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் எச்சரித்தும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த சாசகத்தை பலர் கைவிட மறுக்கிறார்கள்.
அப்படியொரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. படிக்கட்டில் ஆபத்தான முறையில் ஒருவர் ஏறுகிறார். இந்த வீடியோ பார்ப்பதற்கு உற்சாகமாகவும், பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் என்பது தான் உண்மை. ஆனால், இந்த பைக் தடுமாறினால் ஓட்டுபவரின் மரணத்திற்கு வழிவகுக்கும்.
இந்த பைக் சவாரி வீடியோவை Luizinho Ferreira (@luizinhoferreiraa) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட சில நாட்களிலேயே 2.3 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த பதிவை 9.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் விரும்பியுள்ளனர்.
இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கானோர் கருத்து தெரிவித்துள்ளனர். படிக்கட்டில் மிக எளிதாக பைக்கை ஓட்டியதைக் கண்டு நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். யமஹா நிறுவனம் இதை தங்கள் அதிகாரப்பூர்வ விளம்பரமாக மாற்ற வேண்டும் என்று ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். மற்றொருவர் மற்றொருவர் அந்த நபரை ஸ்டண்ட் மாஸ்டர் என்று பாராட்டியுள்ளார்.