பாரீஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து 120 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
பாரீஸ் ஒலிம்பிக் 2024 போட்டி ஜூலை 26-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் 13 பிரிவுகளில் 120 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். மேலும், இம்முறை தடகளம் மற்றும் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் தலா 21 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது சிறப்பு.
அதன்படி, இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய போட்டியாளர்களின் பட்டியல் பின்வருமாறு: வில்வித்தையில் தீரஜ் பொம்மதேவர் (ஆண்கள் ரீகர்வ்), தடகளத்தில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, கிஷோர் குமார் ஜெனா ஆகியோர் பங்கேற்கின்றனர். ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் முரளி ஸ்ரீசங்கர், ஆண்களுக்கான 3,000 மீட்டர் ஸ்மீம்பிள்சேஸ் என்ற குதிரை ஓட்டப் போட்டியில் அவினாஷ் சேபிள், பெண்களுக்கான 3,000 மீட்டர் பிரிவில் பருல் சவுத்ரி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
பெண்களுக்கான 20 கி.மீ ரேஸ்வாக் போட்டியில் பிரியங்கா கோஸ்வாமி, ஆண்களுக்கான 20 கி.மீ ரேஸ்வாக் போட்டியில் அக்ஷ்தீப் சிங், ராம் பாபூ, அர்ஷ்பிரீத் சிங், விகாஸ் சிங், பரம்ஜீத் பிஷ்ட், சூரஜ் பன்வார், சர்வின் செபாஸ்டியன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மாரத்தான் நடை கலப்பு ரிலே போட்டியில் பிரியங்கா கோஸ்வாமி, அக்ஷ்தீப் சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். பெண்களுக்கான தொடர் ஓட்டப்போட்டியில் ரூபல் சவுத்ரி, எம்.ஆர்.பூவம்மா, ஜோதிகா ஸ்ரீ தண்டி மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோரும், ஆண்களுக்கான தொடர் ஓட்டப்போட்டியில் முஹம்மது அனஸ் யாஹியா, முஹம்மது அஜ்மல், ஆரோக்கிய ராஜீவ் மற்றும் அமோஸ் ஜேக்கப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பூப்பந்து போட்டியில் பி.வி.சிந்து, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் எச்.எஸ்.பிரனய், லக்ஷ்யா சென் ஆகியோரும், பெண்கள் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா மற்றும் தனிஷா கிரஸ்டோ,ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
பெண்களுக்கான 75 கிலோ குத்துச்சண்டை போட்டியில் லோவ்லினா போர்கோஹைன், பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் நிகத் ஜரீன், பெண்களுக்கான 54 கிலோ பிரிவில் ப்ரீத்தி பவார் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதே போல் ஆண்கள் 71 கிலோ பிரிவில் நிஷாந்த் தேவ், ஆண்களுக்கான 51 கிலோ பிரிவில் அமித் பங்கல், பெண்களுக்கான 57 கிலோ பிரிவில் ஜாஸ்மின் லம்போரியா ஆகியோர் விளையாடுகின்றனர். குதிரையேற்ற போட்டியில் அனுஷ் அகர்வாலா பங்கேற்கிறார். படகோட்டுதல் போட்டியில் விஷ்ணு சரவணன், பால்ராஜ் பன்வார், நேத்ரா குமணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் பாலக் குலியா, இஷா சிங், மனு பாகர், ரிதம் சாங்வான், மெஹுலி கோஷ், திலோத்தமா சென், சிஃப்ட் கவுர் சாம்ரா, ஸ்ரீயங்கா சதாங்கி, ராஜேஸ்வரி குமாரி, ரைசா தில்லான், வருண் தோமர், அனிஷ் பன்வாலா, விஜய்வீர் சித்து, ருத்ராங்க்ஷ் பாட்டீல், அர்ஜுன் பாபுதா, ஸ்வப்னில் குசலே, அகில் ஷெரன், பௌனீஷ் மெந்திரட்டா, அனந்த்ஜீத் சிங் நருகா, ஸ்ரேயாசி சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மேலும் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆண்கள், இந்திய பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன. டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுமித் நாகல் கலந்து கொள்கிறார். பளு தூக்கும் போட்டியில் மீராபாய் சானு, மல்யுத்தப்போட்டியில் பந்தல் பங்கல், வினேஷ் போகட், ராப்கா ஹூடா, அன்ஷு மாலிக் ஆகியோர் களமிறங்குகின்றனர்.