சிறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறைகள், சீர்திருத்த பணிகள் துறைக்கு தேர்வான அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறைகள், சீர்திருத்த பணிகள் துறை காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில், 5 சிறை அலுவலர்கள் மற்றும் 44 உதவி சிறை அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

சிறைத் துறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை

இவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 10 நபர்களுக்கு ஆணைகளை, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிறைவை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையம் மூலம், ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 37 மைய சட்டங்கள் மற்றும் 63 தமிழ்நாடு மாநில சட்டங்கள் என மொத்தம் 100 சட்ட புத்தகங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

சட்ட புத்தகங்களை வெளியிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்நிகழ்ச்சியில் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, சிறைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

x