உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயில் அருகே பனிப்பொழிவு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தராகண்ட் மாநிலத்தில் சார் தாம் யாத்திரை தொடங்கியதில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் கேதார்நாத்துக்கு வந்து செல்கின்றனர். தற்போது கேதார்நாத் கோயிலின் பின்புறத்தில் திடீரென நேற்று பனிப்பொழிவு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ருத்ரபிரயாக் காவல் துறை கண்காணிப்பாளர் டாக்டர் விசாகா அசோக் கூறுகையில்," காந்தி சரோவர் மலைகளில் இருந்து கனமழை பெய்து, கேதார்நாத்தில் உள்ள காந்தி சரோவரில் அதிகாலை 5 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.
கேதார்நாத் கோயிலுக்குப் பின்னால் உள்ள மலையில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டளுளுத. பனிச்சரிவில் விழுந்த பனி அதிவேகத்தில் பாய்ந்து கோயிலுக்குப் பின்னால் உள்ள காந்தி ஏரியில் விழுந்தது. இந்த விபத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. கோயில் பாதுகாப்பாக உள்ளது" என்றார்.