பகீர்... திடீரென இடிந்து விழுந்த தண்ணீர் தொட்டி: உடல் நசுங்கி 2 பெண்கள் பலி!


உடைந்து விழுந்த தண்ணீர் தொட்டி

உத்தரப்பிரதேசத்தில் இரவில் திடீரென மேல்நிலைத் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்த விபத்தில் 2 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் நேற்று இரவு திடீரென மேல்நிலைத் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது. இதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உடைந்து விழுந்த தண்ணீர் தொட்டி

மேலும் சரஸ்வதி (45), பேபி (52), கமலேஷ் (65), நிகுஞ்சா (22), மிலி (18), பிரின்ஸ் (6), கௌரிசங்கர் (84), மகாவீர் (50), விபிந்திரா (34), மற்றும் ரமேஷ், சந்த் (66) உள்பட 13 பேர் காயமடைந்ததாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச ஆவாஸ் விகாஸ் பரிஷத் அமைப்பால் உருவாக்கப்பட்ட கிருஷ்ணா விஹார் காலனியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவத்தால் தண்ணீர் தொட்டி உடைந்து பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மின் சாதனங்கள் பெருமளவு சேதமடைந்துள்ளன. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்களும் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததால் சேதமடைந்தன. சம்பவம் நடந்த உடனேயே காவல் மற்றும் என்டிஆர்எஃப் மற்றும் அவசர சேவைகள் பிரிவு ஊழியர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

x