டாஸ்மாக் சரக்கில் ‘கிக்’ இல்லை; அமைச்சர் துரைமுருகன் கூறுவது உண்மைதான் - அண்ணாமலை அதிரடி!


அண்ணாமலை - பாஜக

டாஸ்மாக் மதுபானம் தரமானதாக இல்லை, கிக் இல்லை என தமிழக அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை அவினாசி சாலை முதலிபாளையத்தில் நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை," சுதந்திரமாக இயங்கக்கூடிய சிஏஜி, தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தை தணிக்கை செய்து கணக்கு வழக்குகளில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி இருக்கிறார்கள்.

துரைமுருகன்

அதேபோல தமிழக நீர்வளத்துறை துரைமுருகன் டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லையென காமெடியாக சொன்னாலும், நான் கள்ளக்குறிச்சிக்கு போகும் போது எங்களிடம் சிலர் இதையே சொன்னார்கள். இன்று டாஸ்மாக்கின் சரக்கில் தரமின்றி தண்ணீரை போன்று விற்கிறார்கள் என்று கூறினார்கள். எனவே போதை அதிகமாக வேண்டும் என்பதற்காக தான் கள்ளச்சாராயம், அபின் மற்றும் கஞ்சாவை நோக்கி சென்று இருக்கிறார்கள் என்று கள்ளக்குறிச்சியில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்.

டாஸ்மாக் மது

டாஸ்மாக் சரக்குகளின் தரம் குறித்து எதுவும் ஆய்வு நடத்துவது இல்லை. டாஸ்மாக் குடிமக்களை அடிமையாக்குகிறது ஒரு பக்கம் என்றாலும், அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக சொல்லியிருந்தாலும் அது உண்மை. டாஸ்மாக் மதுபானம் தரமானதாக இல்லை, கிக் இல்லை என அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.

சிஸ்டத்தில் பிரச்சனை இருக்கிறது என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அரசு தவறாக வேலை செய்கிறது என்று நகைச்சுவையாக அவர் சொன்னார். ஆனால் இதை நகைச்சுவையாக கடந்து செல்லக் கூடாது" என அண்ணாமலை கூறினார்.

x