அனல் மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி... மின்சார உற்பத்தி நிறுத்தம்


தூத்துக்குடி அனல் மின் நிலையம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக 2வது யூனிட்டில் 45 நாட்கள் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட இருப்பதால் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் தமிழக அரசின் சார்பில் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 5 அலகுகள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு முழுவதும் பலத்த காற்று வீசி வருவதால் காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும் பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதால் மின் தேவையும் கணிசமாக குறைந்துள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையம்

இதனிடையே தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இரண்டாவது யூனிட்டில் 45 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிக்காக இந்த உற்பத்தி நிறுத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக அனல் மின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 45 நாட்களுக்கு 210 மெகாவாட் மின்சார உற்பத்தி குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையம்

ஆனால் இதனால் தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

x