அஜித் ரசிகர்களை குஷிப்படுத்திய இயக்குநர் வெங்கட்பிரபு!


இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் அஜித்தின் ஐம்பதாவது படமாக ‘மங்காத்தா’ வெளியானது.

நீண்ட நாட்கள் கழித்து நடிகர் அஜித் நெகட்டிவ் ஷேட்டில் தனது ஐம்பதாவது படமான ‘மங்காத்தா’வில் நடித்திருந்தார். கடந்த 2011ல் வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்பதுதான் ரசிகர்களின் கேள்வி.

’மங்காத்தா’ படத்தில் அஜித்...

சமீபத்தில் அஜித்தின் பிறந்தநாளை ஒட்டி படமும் ரீரிலீஸ் ஆனது. அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில், இந்தப் படத்திற்காக முதன் முதலில் வடிவமைக்கப்பட்ட போஸ்டர் டிசைனை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் வெங்கட்பிரபு.

’மங்காத்தா’ படத்தில் இணைந்து நடித்த அஜித்- த்ரிஷா ஜோடி ‘விடாமுயற்சி’ படத்திலும் இணைந்திருக்கிறது. நாளை மாலை ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் பார்வை வெளியாக இருக்கிறது என்ற அப்டேட் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், வெங்கட்பிரபு ‘மங்காத்தா’ போஸ்டர்களைப் பகிர்ந்திருப்பது அஜித் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

x