மிகக் கனமழையால் 22 மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... அருணாச்சலப் பிரதேசத்திற்கு ரெட் அலர்ட்!


மழையால் டெல்லியில் மிதக்கும் சாலை.

இந்தியாவில் 22 மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் அருணாச்சலப் பிரதேசத்தில் அதி கனமழைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இன்று (ஜூன் 29) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன் அறிக்கையின்படி ஹரியாணா, சண்டிகர், டெல்லிக்கு ஜூன் 29 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் கன (64.5-115.5 மிமீ) முதல் மிகக் கனமான (115.5-204.4 மிமீ) மழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 30-ம் தேதி சில பகுதிகளில்- மிகக் கனமான மழை பெய்யக்கூடும்.

டெல்லி பிரகதி மைதான சுரங்கப்பாதையில் இருந்து மழைநீர் அகற்றப்படுகிறது

இந்தியாவின் 22 மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் அருணாச்சலப்பிரதேசத்தில் அதிக கனமழைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் குஜராத் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். ஜம்மு காஷ்மீரிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக, டெல்லியில் வரலாறு காணாத மழை பெய்தது, இதனால் தண்ணீர் தேங்கி பெரும் உயிர் மற்றும் சொத்துகள் சேதம் ஏற்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விபத்து

போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், ஏராளமான வாகனங்களும் சேதமடைந்தன. மேலும் பல இடங்களில் சுவர், தண்டவாளங்கள், மரங்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

x