நடிகர் பிரஷாந்தின் ‘அந்தகன்’ படத்தில் ரிலீஸ் டேட் குறித்தான அப்டேட் வந்துள்ளது.
பாலிவுட்டில் வெளியான ‘அந்தாதூன்’ படத்தை இயக்குநர் தியாகராஜன் ‘அந்தகன்’ என்ற பெயரில் பிரஷாந்த், லைலாவை வைத்து இயக்கி, தயாரித்து இருந்தார். இந்தப் படம் உருவாகி பல வருடங்கள் ஆகி இருந்தாலும் வெளிவராமல் இருந்தது. இந்தப் படம் பிரஷாந்தின் சினிமா கரியருக்கு ரீ- எண்ட்ரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இப்போது ‘அந்தகன்’ படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்ரன், சமுத்திரக்கனி உள்ளிட்டப் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.
இந்த வருடம் நடிகர் விஜயுடன் பிரஷாந்த் இணைந்து நடித்துள்ள ‘GOAT' படம் வெளியாக இருக்கும் நிலையில், அதற்கு முன்னதாகவே ‘அந்தகன்’ வெளியாக இருப்பது பிரஷாந்த் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.