ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாட்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு!


பவன் கல்யாண்

ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

நடிகர் பவன் கல்யாண் சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று துணை முதல்வராக பதவியேற்றார். பவன் கல்யாணின் ஜனசேனா, பாஜக மற்றும் தெலுங்கு தேசம் மூன்றும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு

இந்த நிலையில், அவர் திடீரென 11 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். ஆந்திர மாநில மக்களின் மகிழ்ச்சி, நலன் மற்றும் நாட்டின் செழிப்பிற்காகவே இந்த விரதம் என்றும் கூறியுள்ளார். இதற்காக வராகி அம்மனை நினைத்து வராகி தீட்சை விரதம் இருக்கப் போகிறார். இந்த விரதம் கடினமானது என்றும் கூறப்படுகிறது.

x