நடிகர் விஜயின் கல்வி விருது வழங்கும் விழா இரண்டாவது ஆண்டாக இன்று நடைபெற்றது. இதில், மாணவர்கள் செய்த க்யூட்டான விஷயங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நடிகர் விஜயின் கல்வி விருது வழங்கும் விழா இரண்டாம் ஆண்டாக இன்று சென்னை, திருவான்மியூரில் நடைபெற்றது. இன்று காலை 9 மணியில் இருந்து மாணவர்களும் பெற்றோர்களும் அரங்கத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.
கடந்த வருடம் மேடையில் செல்ஃபி எடுப்பது, ஆட்டோகிராஃப் வாங்குவது என மாணவர்கள் செய்த விஷயங்கள் வைரலானது. இதனால், கடந்த வருடம் அதிக நேரம் ஆனதை அடுத்து இந்த வருட நிகழ்விற்கு மாணவர்கள், பெற்றோர்கள் மொபைல் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது.
இருந்தாலும் மேடையில் மாணவர்களும் பெற்றோர்களும் விஜயுடன் ஃபோட்டோ எடுக்கும் போது ஹார்ட்டின் போஸ், ’மாஸ்டர்’ பட போஸ் என புகைப்படங்கள் எடுத்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. மாணவர்கள் கேட்டதற்காக முகம் சுழிக்காமல் புன்னகையுடன் போஸ் கொடுத்து மகிழ்ந்தார் விஜய்.
இன்னொரு பக்கம் மேடையில் மாணவரின் பெற்றோர் ஒருவர் விஜயின் ‘வாங்கண்ணா...வணக்கங்கணா’ பாடலை கொஞ்சம் வரிகள் மாற்றி ‘உங்களை முதலமைச்சர் ஆக்குவோங்கண்ணா’ எனப் பாடி வைரலாகி இருக்கிறார்.