அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை... சவரனுக்கு ரூ.328 அதிகரிப்பு!


தங்க நகை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 328 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தின் விலை கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், நேற்று கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 6,625 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 53 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தங்க நகை

இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 41 ரூபாய் உயர்ந்து 6,666 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 328 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கடந்த இரண்டு நாட்களாக விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் 94 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பிளாட்டினம்

தங்கம் விலை உயர்ந்துள்ளபோதும், பிளாட்டினத்தின் விலை சரிவைச் சந்தித்துள்ளது. ஒரு கிராம் பிளாட்டினம் நேற்று 2,703 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 38 ரூபாய் விலை குறைந்து 2,665 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

x