கல்வி விருது வழங்கும் விழாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்... உற்சாகத்தில் மாணவர்கள்!


நடிகர் விஜய்

சாதிய ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாகி அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதித்த நெல்லை மாணவர் சின்னத்துரை அருகே அமர்ந்தார் நடிகர் விஜய்.

பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நடிகர் விஜய் ஊக்கத்தொகை கொடுத்து வாழ்த்தினார். இரண்டாம் ஆண்டாக இந்த நிகழ்ச்சி இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. இதன் முதல் கட்டம் சென்னை, நீலாங்கரையில் இன்று தொடங்கப்பட்டது.

கடந்த ஆண்டு மேடையிலேயே செல்ஃபோனிலேயே மாணவர்கள், பெற்றோர்கள் புகைப்படங்கள் எடுத்ததால், இந்த ஆண்டு செல்ஃபோன் உள்ளே எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. தண்ணீர் பாட்டில், பழச்சாறு, பிஸ்கட் உள்ளிட்டவை அடங்கிய பையும் நிகழ்வுக்கு வந்த மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் கொடுக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகம் என கட்சி அறிவித்த பின்பு அரசியல் கட்சி தலைவராக நடிகர் விஜய் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்வுக்கு பத்துமணியளவில் நடிகர் விஜய் மாஸாக என்ட்ரி கொடுத்தார். அவரை வரவேற்கும் விதமாக ’தளபதி...தளபதி’ உள்ளிட்டப் பாடல்கள் ஒலிக்கப்பட்டது.

தவெக தலைவர் நடிகர் விஜய்

மாணவர்களைப் பார்த்து சிரித்தபடி, உற்சாகமாக கையசைத்தபடி வந்தார் விஜய். சாதிய ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாகி அதில் இருந்து மீண்டு வந்து, அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதித்த நெல்லை மாணவர் சின்னத்துரை அருகே அமர்ந்து, அவருக்கு வாழ்த்துக் கூறினார் விஜய்.

x