தோற்றது உண்மைதான், ஆனால் யாரையும் எங்களால் வெல்ல முடியும்: ரஷித் கான் நம்பிக்கை!


ரஷித் கான்

நாங்கள் தோற்றது உண்மைதான், ஆனால் யாரையும் வெல்ல முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரஷித் கான் கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டி போட்டியில் முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான் அணி, தென்னப்பிரிக்காவுக்கு எதிராக மோசமாக விளையாடியது. டிரினிடாட் பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்த போடடியில் 23 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறிய ஆப்கானிஸ்தான் அணி, இறுதியாக 11.5 ஓவர்களில் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்க அணி 8.5 ஓவர்களில் சேசிங் செய்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் ஆப்கானிஸ்தான் அணியின் கனவும் பொய்த்து போனது.

வெற்றிக் களிப்பில் தென்னப்பிரிக்கா அணி

இதன் மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது. இதனால் தென்னப்பிரிக்கா அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

தோல்வியடைந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான் அணி.

இந்த போட்டிக்குப் பின் பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான்," இது எங்களுக்கு கடினமான போட்டியாகும். ,இநத தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு கடைசியில் தடுமாறியுள்ளோம். அத்துடன் சூழலுக்கு ஏற்றவாறு எங்களை மாற்றியமைக்க தவறிவிட்டோம். டி20 கிரிக்கெட் எப்படி இருக்கிறது என்றால், நீங்கள் எல்லா நிபந்தனைகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்பது தான். தென்னாப்பிரிக்கா அணி சிறப்பாக பந்து வீசியது. இதனால் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்" என்றார்

மேலும் அவர் கூறுகையில்," தென்னாப்பிரிக்கா போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக தோற்றுள்ளோம். இதெல்லாம் எங்களுக்கு ஆரம்பம் தான். ஏனெனில் இந்த போட்டியில் எங்களது ஆட்டம் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. எந்த அணியையும் வீழ்த்தும் நம்பிக்கை எங்கள் வீரர்களுக்கு உள்ளது. அதனால் அரையிறுதியில் தோல்வியடைந்தாலும் நிறைய கற்றுக் கொண்டுள்ளோம்.

தோல்வியடைந்த சோகத்தில் ரஷித் கான்.

எங்களிடம் சிறந்த திறமைகள் இருப்பதையும் நாங்கள் அறிவோம். ஆனால் கடினமான சூழ்நிலைகள், மன அழுத்த சூழ்நிலைகளை கையாள்வதில் அதிகம் உழைக்க வேண்டும். குறிப்பாக மிடில் ஆர்டரில் இன்னிங்ஸை உருவாக்க அதிக அனுபவம் தேவை. எனவே. இந்த தவறுகளை திருத்திக்கொள்ள இது ஒரு பாடமாக உணர்கிறேன்.

இந்தத் தோல்வியின் மூலம் எங்களது தவறுகள் தெளிவாகத் தெரியும். இந்த தவறுகளிலிருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொள்வோம். எனவே, வரும் நாட்களில், குறிப்பாக பேட்டிங் துறையில், கடினமாக உழைத்து வலுவாக மீண்டு வருவோம்" என, ரஷித் கான் நம்பிக்கை தெரிவித்தார்.

x