குழந்தையைக் கடத்தியாக பெண் மீது பயணிகள் கொடூர தாக்குதல்... தடியடி நடத்தி மீட்ட ரயில்வே போலீஸார்!


மேற்கு வங்கத்தில் குழந்தையைக் கடத்தியதாக ரயில் பயணிகளால் பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் பிரிதி நிலையத்தில், குழந்தையைத் தூக்கிச் செல்வதாக சந்தேகத்தின் பேரில், உள்ளூர் ரயிலில் பயணம் செய்த பெண் ஒருவர் கொடூரமாக நேற்று தாக்கப்பட்டார். அத்துடன் தண்டவாளத்தை மறித்து ரயில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்

இதனால் ரயில்வே போலீஸார் தடியடி நடத்தி, அவர்களிடமிருந்து அந்த பெண்ணையும், குழந்தையையும் மீட்டனர். குழந்தையைக் குறித்து அந்த பெண்ணிடம் கேள்வி கேட்ட போது அவர் உரிய பதிலளிக்க முடியாததால் பயணிகள் சந்தேகமடைந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

ஆனாலும், அந்த பெண், குழந்தையின் தாய் என்றும், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள டம்டம் பகுதியில் வசிக்கும் அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் ரயில்வே காவல் துறை அதிகாரி தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அந்த பெண்ணின் வீட்டில் சென்று விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

குழந்தை கடத்தல்

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் குழந்தைகளை கடத்துபவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், மூன்று கும்பல் தாக்குதல் சம்பவங்களில் ஏற்கெனவே நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற வதந்திகளுக்கு மக்கள் மயங்க வேண்டாம் என பலமுறை கேட்டுக்கொண்ட போலீஸார்,, சமூக வலைதளங்களில் குழந்தை கடத்தல் குறித்த பொய்யான செய்தியை பரப்பியதாக சிலரை கைது செய்துள்ளனர்.

x