‘எப்போதும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்’ - சூப்பர் ஸ்டாரை புகழ்ந்த நடிகர் கமல்ஹாசன்!


நடிகர் கமல்ஹாசன்

நடிகர் ஷாருக்கானைப் பற்றி நடிகர் கமல்ஹாசன் புகழ்ந்து பேசியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘இந்தியன்2’. இதன் டிரெய்லர் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்த மாதம் 12ம் தேதி வெளியாக இருக்கும் படத்தை புரோமோட் செய்வதற்காகப் படக்குழு நேற்று மும்பை கிளம்பியது.

’இந்தியன்2’

இதில் பத்திரிகையாளர்கள் கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்தார். அப்போது பத்திரிகையாளர் ‘ஹேராம்’ படத்தில் ஷாருக்கானுடன் பணியாற்றியது பற்றி கேள்வி எழுப்பினார்கள். “’ஹேராம்’ படத்தை நாங்கள் உருவாக்கியபோது நான் அவரை சூப்பர் ஸ்டாராகவோ அல்லது அவர் என்னை சூப்பர் இயக்குநராகவோ நினைக்கவில்லை.

நண்பர்களாகதான் இணைந்து பணியாற்றினோம். இந்தப் படத்தில் நடித்ததற்காக ஷாருக்கான் சம்பளம் எதுவும் வாங்கவில்லை. எந்த சூப்பர் ஸ்டாரும் இப்படி செய்யமாட்டார். கலையை ரசிக்கும் ஒருவரால்தான் இப்படியான விஷயம் செய்ய முடியும்.

'ஹேராம்’ படத்தில் நடிகர் கமல்ஹாசன், ஷாருக்கான்

இதற்காக எப்போதும் அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். சூப்பர் ஸ்டார் பட்டத்தை நாங்களாக வைத்துக் கொள்வதில்லை. மக்கள் விரும்பி தருவதைத்தான் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்” என்றார் அவர்.

x