கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இருப்பினும் அடுத்தடுத்து உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகிறது.
சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த ஒருவர் உயிரிழந்ததை அடுத்து தற்போது பலி எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஆறு பேர் பெண்கள் ஆவர்.
இந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று தற்போது வரை 74 பேர் வீடு திரும்பி உள்ளனர். மேலும் 89 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.