இவர்கள் தான் என் சாவுக்குக் காரணம்... கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த இளைஞர்!


தற்கொலை செய்து கொண்ட கிரண்.

என் மரணத்திற்குக் காரணம் கார்மென்ட் நிறுவனத்தின் தர ஏஜிஎம் மற்றும் எச்.ஆர் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், சாமராஜநகர் மாவட்டம், குண்டலுப்பேட்டை தாலுகா பேரம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிரண்(28). இவர் தி.நரசிப்பூரில் உள்ள ஒரு கார்மென்ட் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், கிரண் இன்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தி. நரசிப்பூர் போலீஸார், கிரண் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அத்துடன் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்வதற்கு முன்பு கிரண் எழுதி வைத்த கடிதம் போலீஸாரிடம் சிக்கியது.

அந்த கடிதத்தில், தி. நரசிப்பூரில் உள்ள சாய் கார்மென்ட் நிறுவனத்தின் தர ஏஜிஎம் லோகேஷ் மற்றும் எச்.ஆர்.ஏஜிஎம் அனில் தான் என் தற்கொலைக்கு காரணம் என்று எழுதப்பட்டிருந்தது.

அத்துடன்," நான் என் வேலையில் இருந்து நீக்கப்பட்டேன். அவர்கள் என்னைப் பற்றி மோசமான கருத்தைத் தெரிவித்தனர். இதனால் என்னை எங்கும் வேலைக்கு எடுக்கவில்லை" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கிரண் தற்கொலை குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

x