மக்களவை சபாநாயகர் தான் மக்களின் குரலுக்கு இறுதி நடுவர்... ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல் காந்தி!


சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லாவிற்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி.

மக்களவை சபாநாயகர் தான் மக்களின் குரலுக்கு இறுதி நடுவர். கடந்த முறையை விட இந்த முறை எதிர்கட்சிகள் அந்த குரலை அதிக அளவில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என மக்களவை எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மூன்று முறை எம்.பியாக இருந்த ஓம் பிர்லா, இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் அவரை சபாநாயகர் நாற்காலிக்கு அழைத்துச் சென்றனர்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

சுதந்திரத்திற்கு பிறகு மக்களவை சபாநாயகர் பதவிக்கான மூன்றாவது தேர்தல் இதுவாகும். எட்டு முறை எம்.பி.யாக இருந்த கொடிக்குன்னில் சுரேஷை இந்தியா கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் முன்னிறுத்தியது. இதையடுத்து வாக்குப்பதிவு இன்று நடந்தது.

ஓம் பிர்லா

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான ஓம் பிர்லாவுக்கு 297 எம்.பி.க்கள் ஆதரவும், எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட கொடிக்குன்னில் சுரேஷீக்கு 232 எம்.பி.க்கள் ஆதரவும் இருந்தது. மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லாவிற்கு, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "உங்கள் வேலையைச் செய்ய எதிர்க்கட்சிகள் உங்களுக்கு உதவ விரும்புகின்றன. சபை செயல்பட நாங்கள் விரும்புகிறோம். நம்பிக்கையின் அடிப்படையில் ஒத்துழைப்பது மிகவும் முக்கியம். எதிர்க்கட்சிகளின் குரல் இந்த அவையில் பிரதிநிதித்துவம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.எங்களை பேச அனுமதிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

ராகுல் காந்தி

ஆனால், சபை எவ்வளவு திறமையாக நடத்தப்படுகிறது என்பது கேள்வி அல்ல.இந்தியாவின் குரல் எந்தளவுக்கு கேட்கப்படுகிறது என்பதுதான் கேள்வி. மேலும் இந்த தேர்தல் அரசியலமைப்பை எதிர்க்கட்சிகள் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதன் மூலம், இந்த அரசியலமைப்பைப் பாதுகாக்கும் உங்கள் கடமையைச் செய்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவராக அவரது குடும்பத்தின் இருந்து மூன்றாவது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இவரது தந்தை ராஜீவ் காந்தி 1989-90-ல் இந்த பதவியில் இருந்துள்ளார். ராகுலின் தாய் சோனியா காந்தி 1999-2004 காலக்கட்டம் வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

x