பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்தித்த நஸ்ரியா- நயன்தாரா!


நயன்தாரா மற்றும் நஸ்ரியா

நடிகைகள் நயன்தாரா மற்றும் நஸ்ரியா இருவரும் பத்து வருடங்கள் கழித்து நேரில் சந்தித்துள்ளனர். முத்தமழை பொழிந்து இவர்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

’ராஜா ராணி’ படத்தில் கதாநாயகிகளாக நயன்தாரா மற்றும் நஸ்ரியா இருவரும் நடித்திருந்தனர். இருவருடைய கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது. நயன்தாரா மற்றும் நஸ்ரியா இருவருக்கும் படத்தில் காம்பினேஷன் காட்சிகள் இல்லை என்றாலும் இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருந்தது.

இந்தப் படம் நஸ்ரியா மற்றும் நயன்தாரா இருவரின் சினிமா கரியரிலுமே நல்ல பிரேக் கொடுத்தது. இந்தப் படத்திற்குப் பிறகு நஸ்ரியா சில படங்கள் மட்டுமே நடித்தார். பின்பு பஹத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டு குடும்பம் சகிதமாக செட்டில் ஆனார்.

ஃபஹத்துடன் சேர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டு வருபவர் சமீபகாலத்தில் சினிமாவில் கம்பேக் கொடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் நஸ்ரியா, நயன்தாரா, பஹத் மற்றும் விக்னேஷ்சிவன் நால்வரும் நேரில் சந்தித்து இருக்கின்றனர். நயன் மற்றும் நஸ்ரியா இருவரும் முத்தமழை பொழிந்துள்ள புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து நஸ்ரியா ‘ஒரு வழியாக மீண்டும் நாங்கள் சந்தித்து விட்டோம். எவ்வளவு அன்பு! யாரெல்லாம் இந்த நாளுக்காக எதிர்பார்த்து இருந்தீர்கள்?’ என்ற கேப்ஷனுடன் இதைக் கூறியிருக்கிறார்.

x