சாகசத்தில் இதெல்லாம் சகஜம்தான்... விஜய் பிறந்தநாளில் பாதிக்கப்பட்ட சிறுவன் பேட்டி!


பாதிக்கப்பட்ட சிறுவன்

"சாகசத்தில் இதெல்லாம் சகஜம்தான். சீக்கிரம் நான் திரும்பி வந்துவிடுவேன்” என விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தீயால் பாதிக்கப்பட்ட சிறுவன் பேட்டிக் கொடுத்திருக்கிறான்.

நடிகர் விஜய் இன்று தனது ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை ஒட்டி சென்னை சென்னை, நீலாங்கரையில் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை இன்று ரசிகர்கள் முன்னெடுத்து இருக்கின்றனர். சென்னை புறநகர் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் ஈ.சி.ஆர். சரவணன் ஏற்பாட்டில் சிறுவன் ஒருவனை அழைத்து வைத்து ஓடு உடைக்க வைத்து சாகசம் செய்ய வைத்திருக்கின்றனர்.

இதற்காக, கையில் மண்ணெண்ணைய் ஊற்றி தீ பற்ற வைத்துள்ளனர். ஓடு உடைத்ததும் கையில் இருந்த தீயை சிறுவன் அணைக்க முயன்றபோதும் அது அணையாமல் கை முழுக்க பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சிகிச்சை பெற்று முடித்ததும் ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் விஸ்வா ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ளான். “இதுவரை நான் 15 உலக சாதனைகள் செய்திருக்கிறேன். சாகசங்கள் செய்யும்போது இதுபோன்ற விபத்துகள் நடப்பது சகஜம்தான்.

பாதிக்கப்பட்ட சிறுவன்

பாதுகாப்பு விஷயங்கள் வைத்துக் கொண்டுதான் இந்த சாகசங்கள் செய்வோம். இங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதையும் மீறி இப்படி நடந்துவிட்டது. இப்போது நலமுடன் இருக்கிறேன். ஐ வில் கம்பேக்” எனக் கூறியுள்ளார்.

x