விஜய் பிறந்தநாளில் பயங்கரம்... சிறுவன் கையில் பற்றி எரிந்த தீ!


கள்ளக்குறிச்சி விவகாரத்தால் நடிகர் விஜய் தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தாலும் ரசிகர்களும் அவரது கட்சி தொண்டர்களும் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதில், சிறுவன் ஒருவன் கையில் மண்ணெண்ணைய் ஊற்றி தீ பற்ற வைத்து சாகசம் செய்ததில் விபரீதம் ஏற்பட்டுள்ளது.

சென்னை, நீலாங்கரையில் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை இன்று ரசிகர்கள் முன்னெடுத்து இருக்கின்றனர். சென்னை புறநகர் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் ஈ.சி.ஆர். சரவணன் ஏற்பாட்டில்தான் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

சிறுவன் கையில் பற்றிய தீ

இதில் சிறுவன் ஒருவனை அழைத்து வைத்து சாகசம் செய்ய வைப்பதாகக் கூறி, மண்ணெண்ணைய் ஊற்றி தீ பற்ற வைத்துள்ளனர். அதில் எதிர்பாராத விதமாக சிறுவனுடைய கையில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ பற்றியதால் சிறுவன் பதறி துடித்த நிலையில், தீ பற்ற வைத்தவர் அந்த சிறுவனை காப்பாற்ற முயல அவரது கையிலும் தீ பற்றியுள்ளது.

சிறுவன் கையில் பற்றிய தீ

அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்து இருவருக்கும் முதலுதவி செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சியைப் பார்த்தவர்கள், ’விஜய் பிறந்தநாளில் இது வேண்டாத வேலை’ எனக் கூறி தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

x