பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் அலுவலகத்தில் திருட்டு நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அவர் வீடியோ எடுத்து பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'பாபா பிளாக்ஷீப்’, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘தி ஆக்சிடெண்ட்டல் பிரைம் மினிஸ்டர்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்தவர் நடிகர் அனுபம் கெர். படங்களில் நடிப்பது மட்டுமல்லாது தயாரிப்பிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இவரது அலுவலகத்தில்தான் திருட்டு போயுள்ளது. இந்த விஷயத்தை வீடியோவாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுபற்றி தனது சமூகவலைதளப் பக்கத்தில், ‘மும்பை, வீர தேசாய் சாலையில் உள்ள எனது அலுவகலத்தில் நேற்று இரவு இரண்டு திருடர்கள் வந்துள்ளார்கள். எனது அலுவலகத்தின் இரு கதவுகளை உடைத்து, அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் இருந்த உடைக்க முடியாத பெட்டகங்கள் மற்றும் ஒரு பெட்டியில் இருந்த எங்கள் நிறுவனம் தயாரித்த படத்தின் நெகட்டிவ் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள காவல்துறை, கொள்ளையர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என உறுதி அளித்துள்ளனர். ஏனெனில், அவர்கள் இரண்டு லக்கேஜுடனும் ஆட்டோவில் அமர்ந்திருப்பது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கடவுள் அவர்களுக்கு ஞானத்தை வழங்கட்டும். இந்த காணொளி போலீஸ் வருவதற்கு முன் எனது அலுவலகத்தில் இருப்பவர்களால் பதிவு செய்யப்பட்டது!’ எனக் கூறியுள்ளார்.