பழநி மலைக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... முக்கிய அறிவிப்பு!


பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்

பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் மின் இழுவை ரயில் மற்றும் படிப்பாதையைப் பயன்படுத்துமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழநியில் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு நாள்தோறும் வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

ரோப் கார்

பழநி அடிவாரத்தில் இருந்து மலைக்கு பக்தர்கள் செல்ல படிகள் இருந்தாலும், விரைவாகச் செல்ல ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பழநி கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும், ரோப் காரில் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருதி ரோப் கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக தினமும் 1 மணி நேரமும் மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம்.

அதன்படி ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளது. எனவே, ரோப்கார் சேவை இன்று ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரோப் கார்

எனவே, பழநிக்கு இன்று வரும் பக்தர்கள் மின் இழுவை ரயில் மற்றும் படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோயிலுக்கு செல்லுமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

x