’விடாமுயற்சி’ படப்பிடிப்பு... அஜர்பைஜான் பறந்த நடிகர் அஜித்!


நடிகர் அஜித்

’விடாமுயற்சி’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், நடிகர் அஜித் அஜர்பைஜான் கிளம்பியுள்ளார்.

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த வருடம் தீபாவளிக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அஜித் நேற்று அஜர்பைஜான் கிளம்பியுள்ளார்.

நடிகர் அஜித்

விமானநிலையத்தில் நடிகர் அஜித் கிளம்பிச் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித்திற்கு முன்பாகவே, இயக்குநர் மகிழ்திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர் 15ம் தேதி அங்கு சென்றிருக்கின்றனர்.

’விடாமுயற்சி’ படத்தோடு அஜித் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து வருகிறார். அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்துள்ளது.

'விடாமுயற்சி’ அஜித்- த்ரிஷா

இந்த பிரேக்கில் திருப்பதி செல்வது, மகன் ஆத்விக்குடன் கிரிக்கெட் விளையாடுவது என ரிலாக்ஸாக இருந்தார் அஜித். இப்போது மீண்டும் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்புத் தொடங்கியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

x