வில்லனாக நடிக்கவே எனக்கு விருப்பம்... நடிகர் கமல்ஹாசன்!


‘கல்கி 2898 ஏடி’

”வில்லன்தான் படத்தில் அனைத்து நல்லதையும் செய்ய காரணமானவர். அதனால், எனக்கு வில்லனாகவே நடிக்கவே விருப்பம்” என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, பிரபாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

தீபிகா படுகோனே

இந்த நிகழ்வினை நடிகர் ராணா தொகுத்து வழங்கினார். படத்தில் கர்ப்பமாக இருப்பவராக தீபிகா படுகோனே நடித்திருப்பார். அதனால், நிஜத்திலும் தான் கர்ப்பமாக இருப்பதால் ’பேபி பம்ப்’புடன் வந்திருந்தார் தீபிகா. இதைப் பற்றி நிகழ்வில் உருக்கமாகவும் பேசினார். இன்னும் தீபிகா கதாபாத்திரத்திலேயே இருக்கிறார் என ராணா கலகலப்பாகப் பேசினார்.

இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார். டிரெய்லரில் வந்த அவருடைய தோற்றமும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது. தன்னுடைய வில்லன் கதாபாத்திரம் பற்றி அவர் பேசியிருப்பதாவது, “கெட்டவனாக, வில்லனாக நடிப்பது எனக்குப் பிடிக்கும். ஏனெனில், படத்தில் அவனால்தான் எல்லா நல்ல விஷயங்களும் நடக்கும்.

'கல்கி 2898 ஏடி’

ஹீரோ ரொமாண்டிக்காக டூயட் பாடிக் கொண்டிருக்கும்போது, நான் வில்லனாக நடிக்கிறேன். படத்தில் கெட்ட எண்ணம் கொண்ட முனிவர் நான். நிச்சயம் படம் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.

x