திருமணமான 20 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஆனேகல் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், ஆனேகல் தாலுகா சர்ஜாபூரில் உள்ள கோட் தெருவைச் சேர்ந்தவர் ஷாபாஸ்(24). இவருக்கும் ஷபானா(20) என்பவருக்கும் கடந்த இருபது நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று காலை அவரது அறைக்கு ஷாபாஸ் சென்ற போது, ஷபானா தூக்கில் இறந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சர்ஜாபூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார், தூக்கில் இருந்து ஷபானா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அட்டிபெலே ஒக்ஸ்போர்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதன்பின் வழக்குப்பதிவு செய்து, ஷபானா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தினர். கணவர் ஷாபாஸ் தொல்லையால் தான் அவரது மனைவி ஷபானா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஷாபாஸிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான இருபது நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.