மகனுக்காக வேண்டுதல்... திருவண்ணாமலை வந்த ரஜினி நண்பர்!


நடிகர் மோகன் பாபு

தன்னுடைய மகன் நடித்துள்ள திரைப்படமான ‘கண்ணப்பா’ வெற்றிப் பெற வேண்டும் என்று தெலுங்கு நடிகர் மோகன் பாபு திருவண்ணாமலையில் சுவாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார்.

பிரபல தெலுங்கு திரைப்பட நடிகரும், நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பருமான மோகன் பாபு செங்கோலுடன் இன்று திருவண்ணாமலை, அண்ணாமலையார் ஆலயத்தில் தனது மகன் விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடித்து வெளிவர இருக்கும் ’கண்ணப்பா’ திரைப்படம் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை செய்திருக்கிறார்.

நடிகர் மோகன் பாபு

மோகன் பாபு தயாரிப்பில், இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடித்து வரவிருக்கும் திரைப்படம் ‘கண்ணப்பா’. இதில் நடிகர்கள் அக்‌ஷய்குமார், மோகன்லால், பிரபாஸ், மகேஷ் பாபு உள்ளிட்டப் பலர் கேமியோவில் நடித்திருப்பது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

’கண்ணப்பா’ பட போஸ்டர்...

சிவபெருமானின் உத்தரவினால் தான் இந்தப் படத்தை எடுத்தோம் எனச் சொல்லும் மோகன் பாபு, படம் வெற்றி பெற வேண்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வழிபாடு செய்திருக்கிறார். அங்கு ஆலயத்தில் இருந்த தெலங்கானா மற்றும் ஆந்திரா பக்தர்கள் மோகன் பாபுவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள்.

x