அதிர்ச்சி... திடீரென மாயமான குழந்தை; 8 மணிநேரத்திற்கு பிறகு ஆற்றில் சடலமாக மீட்பு


ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தை

காரைக்கால் அடுத்த பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் வீட்டில் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை மாயமாகிய நிலையில் எட்டு மணி நேரத்துக்கு பிறகு ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் அடுத்த பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் இன்று காலை வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த முருகேசன் என்பவரது ஒன்றரை வயது ஆண் குழந்தை தக்‌ஷன் திடீரென்று காணாமல் போனது. குழந்தை காணாமல் போனதை அறிந்து, பெற்றோர், உறவினர்கள் கிராமம் முழுவதும் தேடினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

குழந்தையின் சடலத்தை மீட்ட போலீஸார்!

இது குறித்து திருபட்டினம் காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரினை தொடர்ந்து குழந்தையை போலீஸார் பல்வேறு பகுதிகளில் தேடும் பணியில் ஈடுபட்டனர். எட்டு மணிநேர தேடலுக்கு பிறகு குழந்தை மாயமான வீட்டிற்கு பின்புறம் உள்ள ஆற்றில் சடலமாக இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸார், குழந்தையின் சடலத்தை மீட்டு, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சோகத்தில் கிராம மக்கள்

மேலும் ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்சினையால் யாராவது குழந்தையை கொன்று ஆற்றில் வீசிவிட்டு சென்றார்களா எனும் கோணத்தில் பெற்றோர், உறவினர்களிடம் விசாரித்து வருகின்றனர். ஒன்றரை வயது ஆண் குழந்தை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகத்தில் இன்று முதல் 21-ம் தேதி வரை இடியுடன் மழை பெய்யும்... வெயிலும் 5 டிகிரி அதிகமாக இருக்கும்!

x