கமலுக்குப் பிடித்த பைக்... சர்ப்ரைஸ் சொன்ன நடிகர் அப்பாஸ்!


நடிகர் அப்பாஸ்

நடிகர் கமலுக்குப் பிடித்த பைக் பற்றி பேசி நடிகர் அப்பாஸ் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோவை தனது சமூகவலைதளப் பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார்.

’காதல் தேசம்’, ‘ஆனந்தம்’ உள்ளிட்ட ஏராளமானப் படங்களில் நடித்தவர் நடிகர் அப்பாஸ். பெண் ரசிகைகள் அதிகம் கொண்ட இவர் ஒருக்கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகினார். கமலுடன் ‘பம்மல் கே. சம்பந்தம்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்தார். இப்போது சினிமாவை விட்டு விலகி நியூசிலாந்தில் குடும்பத்துடன் செட்டில் ஆகியுள்ளார்.

சொந்தமாக தொழில் செய்து வரும் அப்பாஸை இப்போதும் ரசிகர்கள், எப்போது மீண்டும் சினிமாவிற்குள் வருவீர்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சமூகவலைதளங்கள் மூலம் தனது ரசிகர்களுடன் இணைந்து ஆக்டிவாக இருக்கும் அப்பாஸ் தற்போது கமலுக்குப் பிடித்த பைக் பற்றி பேசி ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார்.

குடும்பத்துடன் அப்பாஸ்

ஆக்லாந்தில் இருக்கும் பைக் ஷோரூம் ஒன்றிற்கு சென்றிருக்கிறார் அப்பாஸ். அங்கு பிஎஸ்ஏ பைக்கைப் பார்த்தவர் இது கமல்ஹாசனுக்கு பிடித்த பைக் என்று கூறியிருக்கிறார். மேலும், ‘கமல் சாரிடமும் ஒரு பிஎஸ்ஏ பைக் இருக்கிறது. நீங்களும் இங்கு வந்தால் ரைட் செய்யலாம்’ என்று கூறியிருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகத்தில் இன்று முதல் 21-ம் தேதி வரை இடியுடன் மழை பெய்யும்... வெயிலும் 5 டிகிரி அதிகமாக இருக்கும்!

நெடுந்தீவு அருகே பரபரப்பு... தமிழக மீனவர்கள் 4 பேரை சுற்றி வளைத்து கைது செய்த இலங்கை கடற்படை!

x