நடிகர் ஷாருக்கான் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இருக்கிறார்.
இந்திய சினிமாவில் நடிகர்களின் சம்பளம் எப்போதுமே பேசுபொருள்தான். படத்தயாரிப்பில் பெரும்பகுதி ஹீரோக்களுக்குதான் செலவாகிறது. அந்த வகையில், இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் நடிகர் ஷாருக்கான்.
’ஜவான்’, ‘பதான்’, ‘டங்கி’ என கடந்த வருடம் மூன்று ஹிட் படங்களை பாலிவுட்டில் கொடுத்தார் நடிகர் ஷாருக்கான். இதில் ‘ஜவான்’, ‘பதான்’ ஆகிய இரண்டு படங்கள் ரூ. 100 கோடி வசூல் செய்தது. ஃபோர்ப்ஸ் மேகசின் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலின் படி நடிகர் ஷாருக்கான் இந்த மூன்று படங்களின் ஹிட்டுக்குப் பிறகு தனது சம்பளத்தை ஒரு படத்திற்கு சுமார் ரூ. 150 கோடி- ரூ. 250 கோடி என நிர்ணயித்துள்ளார்.
இவருக்கு அடுத்த இடத்தில்தான் நடிகர் ரஜினிகாந்த் இருக்கிறார். இவர் ஒரு படத்திற்கு ரூ. 150 கோடி - ரூ. 210 கோடி என நிர்ணயித்துள்ளார். மூன்றாவது இடத்தில் இருக்கும் நடிகர் விஜய் ரூ. 130 கோடி - ரூ. 200 கோடி ஒரு படத்திற்கு சம்பளமாக வாங்குகிறாராம். நடிகர் பிரபாஸ் ரூ. 100 கோடி முதல் 200 கோடி வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் அமீர் கான் ஒரு படத்திற்கு ரூ. 100 கோடி முதல் ரூ. 175 கோடி வரை நிர்ணயித்து இருக்கிறார். ஆறாவது இடத்தில் இருக்கும் நடிகர் சல்மான் கான் ரூ. 100 கோடி முதல் ரூ.150 கோடி வரையும், அடுத்த இடத்தில் இருக்கும் நடிகர் கமல்ஹாசனும் ரூ.100 கோடி முதல் ரூ. 150 கோடி வரை சம்பளம் நிர்ணயித்துள்ளார் மற்றும் அல்லு அர்ஜுன் ரூ. 100 கோடி- ரூ. 125 கோடி சம்பளம் வாங்குகிறார்.
கடைசி இரண்டு இடங்களில் இருக்கும் நடிகர் அக்ஷய்குமார் ரூ. 60 கோடி டூ ரூ. 145 கோடியும் நடிகர் அஜித்குமார் ரூ. 105 கோடி எனவும் தங்களது சம்பளத்தை நிர்ணயித்துள்ளனர்.