தள்ளிப்போகும் ரிலீஸ் - ரசிகர்களை ஏமாற்றிய ‘புஷ்பா2’ படக்குழு!


‘புஷ்பா2’ அல்லு அர்ஜூன்

அல்லு அர்ஜூன் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருந்த ‘புஷ்பா2’ திரைப்படம் டிசம்பர் மாதம் தள்ளிப் போயிருக்கிறது. இந்த செய்தி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘புஷ்பா2’ திரைப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று வெளியாக இருப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டது. படம் வெளியாவதை ஒட்டி படத்தில் இருந்து ‘புஷ்பா புஷ்பா...’ பாடலும் ‘ஸ்ரீவள்ளி...’ பாடலும் வெளியாகி கவனம் ஈர்த்தது. டீசரும் அல்லு அர்ஜூன் பிறந்தநாளுக்காக வெளியானது.

’புஷ்பா2’

ஆனால், இப்போது 'புஷ்பா 2: தி ரூல்' படம் டிசம்பர்6, 2024 அன்று வெளியாகும் என புதிய வெளியீட்டு தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த புதிய வெளியீட்டுத் தேதியுடன் படத்தின் வெளியீடு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தள்ளிப் போனதற்கான காரணத்தையும் படக்குழு சமூகவலைதளங்களில் தெளிவுப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து படக்குழு தெரிவித்துள்ளதாவது, ‘படத்தின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் இணையற்ற சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாலேயே இந்த முடிவு எடுத்துள்ளது படக்குழு. இதை அடைய, படத்தைத் தரத்துடன் முடிக்க இன்னும் அதிக நேரம் தேவைப்படும்.

இதனால், படம் முதலில் ஆகஸ்ட் 15, 2024 எனத் திட்டமிடப்பட்டு பின்பு வெளியீட்டுத் தேதி டிசம்பர் 6, 2024க்கு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. படம் நிச்சயம் உங்களை ஏமாற்றாது’ எனக் கூறியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

x