தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விரைவில் மக்களை சந்தித்து கட்சியின் கொள்கைகளை அறிவிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என தனது கட்சியை அறிவித்தார். இன்னும் சில நாட்களில் அவரது பிறந்தநாள் வர இருப்பதை முன்னிட்டு கட்சியின் அடுத்தக் கட்ட வளர்ச்சியைப் பற்றி பல்வேறு விஷயங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக 2026 சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு பயணத்தை நடிகர் விஜய் மேற்கொள்ள உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெகவின் கொள்கை கட்சியின் முதல் மாநாட்டில் தெரிவிக்கப்படும் என அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாது, 2026 தேர்தலில் வென்று மக்கள் பணி செய்ய வேண்டும் என விஜய் விரும்புவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான இடம் பார்த்து வருவதாகவும் புஸ்ஸி ஆனந்த் முன்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
தமிழகத்தில் இன்று முதல் 21-ம் தேதி வரை இடியுடன் மழை பெய்யும்... வெயிலும் 5 டிகிரி அதிகமாக இருக்கும்!
நெடுந்தீவு அருகே பரபரப்பு... தமிழக மீனவர்கள் 4 பேரை சுற்றி வளைத்து கைது செய்த இலங்கை கடற்படை!